Monday, December 1, 2025

மீண்டும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வைரலாகி வரும் கோ பேக் மோடி ஹேஷ்டேக் !

spot_imgspot_imgspot_imgspot_img

பிரதமர் மோடியின் தமிழக வருகையை அடுத்த டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் பெரிய அளவில் டிரெண்டாகிறது.

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னையில் புதிய மெட்ரோ சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தொடங்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் அவர் தமிழகம் வர உள்ளார்.

இந்த நிலையில் எப்போதும் போல இந்த முறையும் பிரதமர் மோடியின் வருகைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடக்க உள்ளது.

பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் அவருக்கு எதிராக #GoBackModi என்ற ஹேஷ்டேக் வைரலாவது வழக்கம். மோடி தமிழகத்திற்குள் நுழைய கூடாது என்று கருப்பு கொடி காட்டி திமுக போராடியதில் இருந்தே இந்த #GoBackModi டிரெண்டாகி வருகிறது. இந்த டிரெண்ட் உலகம் முழுக்க வைரல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக தமிழகத்தின் இந்த #GoBackModi இரண்டு முறை வைரல் ஆனது. இரண்டு முறையும் இந்த டேக் காரணமாக பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. இதற்கு எதிராக பாஜகவினர் நிறைய ஹேஷ்டேக்குள் உருவாக்கினாலும், #GoBackModi அளவிற்கு எதுவும் உலக அளவில் வைரலாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு முறையும் #GoBackModi தேசிய அளவில் முதல் இடம் பிடித்தது. சென்ற வருடம் ஏப்ரல் மாதம் பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi உலக அளவில் முதலிடத்தில் டிரெண்டானது. கடந்த முறை மோடி மதுரை வந்த போது #GoBackModi உலக அளவில் மூன்றாம் இடத்தில் டிரெண்ட் ஆனது.

தற்போது மூன்றாவது முறையாக டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் பெரிய அளவில் டிரெண்டாகிறது. தற்போது தேசிய அளவில் இந்த டேக் முதலிடத்தில இருக்கிறது. இந்த டேக்கில் தொடர்ந்து டிவிட்டுகள் போடப்பட்டு வருவதால் உலக அளவில் இது மீண்டும் முதலிடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img