Monday, February 2, 2026

அதிரை சிட்னி நடத்திய கிரிக்கெட் தொடரின் முடிவுகள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிரிக்கெட் கிளப் நடத்திய 12ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று(27/04/2019) தொடங்கி நடைபெற்று வந்தது.

இத்தொடரின் இறுதி ஆட்டம் இன்று மாலை அதிரை சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அதிரை சிட்னி அணியினரும் அதிரை ASC அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரை சிட்னி அணி வெற்றி பெற்று முதல் பரிசான ரூ. 10,000 ஐ தட்டிச் சென்றது.

இறுதி ஆட்டத்தில் வெற்றியை நழுவவிட்ட அதிரை ASC அணிக்கு இரண்டாம் பரிசான ரூ. 7,000 மும், அடுத்தடுத்த இடங்களை பிடித்த சிட்னி பி அணிக்கும், சச்சின் பாய்ஸ் அணிக்கும் தலா ரூ. 4,000 வழங்கப்பட்டது.

போட்டிக்கு பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எம்.பி.ஏ. புகாரி மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் அஷ்ரப் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை அதிரை ASC அணியின் வீரர் பிலால் வழங்கினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img