மணப்பாறை சிறுவன் சுஜித் மரணம் தமிழக அரசை உசுப்பி விட்டுள்ளது.
ஆம் பல ஆண்டுகளாக தீர்க்கப் படாத, ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுதவற்கு இப்போதேனும் முடிவு கட்ட முயற்சி மேற்கொள்ள அரசு பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளது. அதில் மிக முக்கியமாக, பயன்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அவற்றை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற முயலுதல் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் சிக்கியவர்களை மீட்கும் சாதனங்களை கண்டு பிடிப்பவர்களுக்கு ரூ 5 லட்சம் பரிசுத் தொகையுடன் அரசு அங்கீகாரமும் வழங்குதல்.
அரசின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது. ஒன்றை இழந்துதான் ஒன்றை பெற வேண்டி இருக்கிறது.








