மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- கோடை வெப்பம் நிலவி வரும் நிலையில், சென்னை, கோவை, சேலம் என பல்வேறு மாவட்டங்களில் நேற்று திடீரென மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று நள்ளிரவும் மழை பெய்ததால் சென்னையில் இன்று காலை இதமான சூழல் நிலவுகிறது.
- இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் ஓரிரு இடங்களிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 13 மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் இதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இதுபோலவே மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
- மேலும் கோவையில் ஓரிரு இடங்களிலும், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் இதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- முன்னதாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.