Sunday, March 29, 2026

அதிரை : சிறு பிராயத்திலேயே நோயை தினிக்கும் பேரூராட்சி !கண்டுகொள்ளாத அதிகாரிகளால் நோய் பரவும் அபாயம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

கண்டுகொள்ளாத அதிகாரிகளால் நோய் பரவும் அபாயம்!!

இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் தமிழக மக்களால் பால்வாடி என அழைக்க படுகிறது.

இந்த மையத்தில் பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன.

1975 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் (ICDS) கீழ் குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும் அவர்களிடையே பெருமளவில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் இம் மையங்கள் துவங்கப்பட்டன.

அந்த வகையில் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வரும் சமூதாய ஊட்டச்சத்து மையத்தின் அருகே கழிவு நீர் குட்டைப்போல் தேங்கி கிடக்கிறது.

இதனால் அங்கு பயிலும் குழந்தைகள் கொசுக்கடியால் அவதியுறுவதும், காய்ச்சல் உள்ளிட்ட தோல் நோய்களால் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார துறை அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்து சுத்தம் செய்வதுடன், அங்கு கழிவுநீரை கொட்டும் குழாய்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img