Home » அதிரையில் நாளை மனித சங்கிலி போராட்டம்!!

அதிரையில் நாளை மனித சங்கிலி போராட்டம்!!

by admin
0 comment

நாடு முழுவதிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பலைகள் வலுத்து வரும் நிலையில், அடுத்த கட்ட நகர்வாக மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டத்தை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்துள்ளனர்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் நாளை நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கில் போராட்டத்தின் ஒரு பகுதியாக அதிரையிலும் மனித சங்கிலி போராட்டம் அதிரை ECR சாலையில் மாலை 4.30 மணிமுதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு பகுதியிலிருந்து வரும் ஒவ்வொருவரும் ECR சாலையில் நின்று கொண்டு மனித சங்கிலியில் கலந்துக் கொள்ள வேண்டுமாய் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு : 9894 973 416, 9842 071 066, 8667 043 476

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter