Friday, March 27, 2026

அதிரையில் ஹஜ் பெருநாள் முன்னிட்டு களைகட்டிய செம்மறி ஆடுகள்!

spot_imgspot_imgspot_imgspot_img

இஸ்லாமியர்களின் தியாகத்திருநாளான பக்ரீத் பண்டிகை ஜூலை 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் குர்பானியாக இறைச்சியை தானமாக வழங்கி மகிழ்வது இப்பண்டிகையின் சிறப்பாகும். இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டி உள்ளது.


அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி விவசாயிகளிடம் இருந்து ஏராளமான செம்மறி ஆடுகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து அதிராம்பட்டினம் நகரிலுள்ள வர்த்தகப் பகுதிகளில் விற்பனைக்காக நிறுத்தி வைத்துள்ளனர்.
அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செம்மறி ஆட்டுக்கறி கிலோ ரூ.540 ஆக இருந்தது. ஆனால் தற்போது இதன் விலை அதிகரித்து உள்ளது. வழக்கமாக பக்ரீத் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை தொடங்கிவிடும். தினமும் வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்காக ஆடுகளை திடலில் மேயவிடுவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் வாடிக்கையாளர் பார்வையிடும் விதமாக ஆடுகளை மேயவிட்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான ஆடுகளை தேர்வு செய்து விலைக்கு வாங்கி செல்கிறார்கள். சராசரியாக 14 முதல் 18 கிலோ வரை எடையுள்ள ஒரு ஆடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை போகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img