Wednesday, March 18, 2026

‘வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்திடுக’ – பட்டுக்கோட்டையில் டிசம்பர் 6 தமுமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நாளை டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக்கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பில் நாளை(டிசம்பர் 6) பட்டுக்கோட்டையில் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக்கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நாளை டிசம்பர் 6 மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அப்துல் மாலிக் தலைமை வகிக்கிறார். தமுமுக தலைமை பிரதிநிதி காரைக்கால் அப்துல் ரஹீம், மமக மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா ஆகியோர் கண்டன உரையாற்ற உள்ளார்கள். ஆகையால் பொதுமக்கள் அனைவரும் இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

< அதிரை தக்வா பள்ளியில் இருந்து நாளை(டிசம்பர் 6) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

< மேலும் பெண்களுக்கும் தனி வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டையில் நாளை நடைபெறும் மக்கள் திரள் ஆர்பாட்டத்திற்கான பிரச்சாரம் இன்று அதிரையன் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அதிரையில் மொத்தம் 9 இடங்களில் நடைபெற்ற போராட்டத்திற்கான பிரச்சாரத்தில் அதிரை நகர தமுமுக நிர்வாகிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு அழைப்பு கொடுத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி...

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img