Sunday, February 1, 2026

மோடி அரசை வெற்றி பெற செய்த அதிமுக !!

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அபார வெற்றி பெறச் செய்த அதிமுக !

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி லோக்சபாவில் கொண்டுவந்தது. இன்று முழுக்க விவாதம் நடைபெற்று இரவு 11 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் சுற்றி வந்தது. அதிமுக தலைமையிடம் பாஜக தலைவர் அமித்ஷா ஆதரவு கோரி தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் ஒரு தகவல் உலாவியது.

இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு இல்லை என மைத்ரேயன் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று தெரிவித்தார்.

காங்கிரசும், திமுகவும் ஆதரிக்கும் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு கிடையாது என்று மைத்ரேயன் காரணம் தெரிவித்தார்.

ஆனால் நடந்தது வேறு !

வாக்கெடுப்பு நடைபெற்றபோது அதிமுக உறுப்பினர்கள் அவையில்தான் இருந்தனர். அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்தன. ஒருவரும் வாக்கெடுப்பை உள்ளே இருந்தபடி புறக்கணிக்கவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 126 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எனவே அதிமுக பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது உறுதியாகியுள்ளது.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே பாஜக மூவ் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img