Friday, May 3, 2024

இரட்டை வேடம் போடும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் !

Share post:

Date:

- Advertisement -

தமிழக அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று குப்பைகள் வாங்கப்பட வேண்டும் என்பது தான் சட்டம். ஆனால் அதிரை பேரூராட்சி நிர்வாகம் இத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. அதிரையின் பெரும்பாலான பகுதிகளில் இத்திட்டம் கைகழுவப்பட்டுவிட்டது. அவ்வாறு சில பகுதிகளில் இத்திட்டம் தற்போது நடைமுறையில் இருந்தாலும் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.

சரி விஷயத்திற்கு வருவோம்… அதிரை பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டு வாய்க்கால் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கென்று தனியாக இடமில்லை. பேரூராட்சியின் சார்பில் வீடுகளுக்கே நேரடியாக சென்று குப்பைகள் பெற்று வந்தனர். ஆனால் கடந்த ஒரு வார காலமாக குப்பைகளை பெறுவதற்கு பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்கள் வரவேயில்லை. இதனால் கடந்த ஒரு வாரக்காலமாக குப்பைகள் வீட்டில் அப்படியே கிடக்கின்றன. அக்குப்பைகளால் வீடுகளில் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகளால் கொடிய நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அப்பகுதி மக்கள் துப்புரவு பணியாளர்களிடம் இதுகுறித்து கேட்டதற்கு, நீங்கள் குப்பையை கொட்டுவதற்கு இடத்தை சொல்லுங்கள். அப்படி சொன்னால் தான் நாங்கள் குப்பையை வந்து வாங்குவோம். இல்லையென்றால் வாங்கமாட்டோம். நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடுங்கள். எங்களை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அதிரை பேரூராட்சி சார்பில் கடந்த மாதம் தான் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. ஆனால் இப்போது டெங்கு காய்ச்சல் பரவுவதற்கும் அதிரை பேரூராட்சிதான் காரணமாக உள்ளது. ஊரிலே பழமொழி ஒன்று சொல்லுவார்கள்… தொட்டிலையும் ஆட்டுவார்களாம் , பிள்ளையையும் கிள்ளுவார்களாம்.. இது அதிரை பேரூராட்சிக்கு அப்படியே பொருந்துகிறது.

மழைக்காலமும் விரைவில் தொடங்க இருப்பதால் இவ்விவகாரத்தில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து மெத்தனப்போக்கை கடைப்பிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை வீடுகளுக்கே சென்று பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுத்து 13வது வார்டு மக்களின் துயரை போக்க வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...