Saturday, March 28, 2026

மேக மூட்டத்துடன் காணப்படும் அதிரை..!! புயல் வருமா..? வராதா..? என்ற அச்சத்தில் மக்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

கஜா புயலால் பாதிக்கப்பட்டு தற்பொழுது பழைய நிலையை அடைந்து வரும் நிலையில் வானிலை அறிக்கை அடுத்து “பெதாய்” புயல் உருவாகி இருப்பதாக அறிக்கை விட்டுள்ளது.

கடந்த மாதம் டெல்ட்டா பகுதிகளை புரட்டிப்போட்ட கஜா புயலின் அனுபவத்தால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

தற்பொழுது அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மேக மூட்டத்துடனும், காற்று வீசுவதுமாக இருக்கின்றது. இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். இந்த காற்று இன்று காலை முதல் இரவு வரை இருக்கும். இது புயல் அல்ல. எனவே யாரும் பயப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது பெதாய் புயலானது 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் கரையை நெருங்கும். இதனால் சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும். இந்த புயல் உறுதியாக டெல்ட்டா பகுதிகளை நெருங்காது. டெல்டா பகுதிக்கு எந்தவித சிறு பாதிப்பும் இருக்காது. எனவே மக்கள் பயப்பட தேவையில்லை.

இந்த புயலானது சென்னையை நெருங்கி நர்ஸாப்பூர் சென்று அமலாபுரம்,புதுச்சேரியில் உள்ள ஏனோம்,காக்கி நாடா,அன்னவரம்,விசாகப்பட்டினம் வரை சென்று விசாகப்பட்டினத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகின்ற 20ஆம் தேதி அடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img