Friday, February 6, 2026

இந்த முறை வெறும் கோ பேக் மோடி கிடையாது… அதற்கும் மேல்… நெட்டிசன்ஸ் அலும்பல் !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் நடைபெற உள்ள பாஜகவின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ளார். சென்னையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கும். பிரதமர் மோடி 4 மணிக்கு இதில் கலந்து கொள்வார். இதில் பாஜகவுடன் தமிழக கூட்டணி கட்சிகளும் மேடை ஏற இருக்கிறது.

பொதுவாக பிரதமர் மோடி தமிழகம் வரும் போது கோ பேக் மோடி #GoBackModi என்ற டேக் டிரெண்டாவது வழக்கம். தமிழர்கள் இதை ஒரு வழக்கமாக, குட் மார்னிங் சொல்வது போல மோடி வரும் போது சொல்வார்கள். டிவிட்டரில் #GoBackModi டிரெண்டானால், கண்டிப்பாக மோடி தமிழகத்தில் இருக்கிறார் என்று கண்டுபிடித்து விடலாம்.

இதற்கு முன் நான்கு முறை இந்த டேக் வைரலானது. பிரதமர் மோடி சென்னை வந்த போது – உலக அளவில் நீண்ட நேரம் டிரெண்ட், நம்பர் 1 இடம் பிடித்தது. பிரதமர் மோடி மதுரை வந்த போது – உலக அளவில் டிரெண்ட், நம்பர் 3 இடம் பிடித்தது. பிரதமர் மோடி திருப்பூர் வந்த போது – உலக அளவில் டிரெண்ட், மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்தது. பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்த போது – தேசிய அளவில் டிரெண்ட், மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்தது.

ஆனால் இந்த முறை #GoBackModi க்கு பதில் #GoBackSadistModi வைரலாகிக் கொண்டு இருக்கிறது. தேசிய அளவில் இந்த டேக் தற்போது முதலிடம் பிடித்து இருக்கிறது. #GoBackModi டேக்கை விட #GoBackSadistModi டேக்கில் அதிக டிவிட்டுகள் போடப்பட்டதால் இது இந்தியாவில் முதலிடம் பிடித்து இருக்கிறது.

#GoBackModi க்கு எப்படி திமுகவின் கருப்பு கொடி போராட்டம் ஒரு விதையோ அதே போல்தான் #GoBackSadistModi க்கு திமுக தலைவர் ஸ்டாலின்தான் விதை போட்டது. பிரதமர் மோடியை முதன்முதலில் திமுக கூட்டத்தில் ஸ்டாலின்தான் சாடிஸ்ட் என்று கூறினார். தற்போது அதே வார்த்தை வைரலாகி வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img