Saturday, March 28, 2026

அதிரை : திமுகவின் திருவாரூர் பிரச்சார கூட்டத்தில் அதிகளவில் தொண்டர்கள் பங்கேற்க முடிவு !

spot_imgspot_imgspot_imgspot_img

நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று வருகின்றனர்.

இதில் முதற்கட்டமாக திமுகவின் பிரச்சார கூட்டம் நாளை திருவாரூரில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

முன்னதாக அதிராம்பட்டினம் பேரூர் நகர செயலாளர் இராம. குணசேகரன் அவர்கள் ஒருங்கிணைப்பில் அதிராம்பட்டினத்தில் உள்ள கூட்டணி கட்சி கிளை நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, இந்திய காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இந்த நிகழ்வை அடுத்து தஞ்சையில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் நீலமேகம் மற்றும் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் SS. பழனிமாணிக்கம் ஆகியோரை ஆதரித்து கூட்டணி கட்சியின் தலைவர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிரை நகர கூட்டணி கட்சி கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் வெகுவாக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன்...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில்...

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை...
spot_imgspot_imgspot_imgspot_img