தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. திமுக கட்சி இதற்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதேபோல் திமுக கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக திமுக தற்போது தேர்தல் அறிக்கை பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி உள்ளது. திமுக கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியானது.
பல்துறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களை கல்வியாளர்கள், போராளிகள், பொதுமக்கள், நெட்டிசன்கள் என அனைவரின் கருத்துகளைக் கேட்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி , டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
இந்த அறிக்கை நேற்று காலை இறுதி வடிவம் பெற்றது. இன்று இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை :
◆தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழும் பயன்படுத்தப்படும்
◆தமிழ் இணை ஆட்சி மொழியாக அறிவிக்கப்படும்
◆வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்
◆தனி நபர் வருமானம் ரூ. 1.50 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
◆எல்பிஜி சிலிண்டர்களுக்கு பழைய விலை நிர்ணயம் செய்யப்படும். வங்கி கணக்கில் மானியம் அளிக்காமல், பழைய முறைப்படி மானிய விலை போக சிலிண்டர்கள் வழங்கப்படும்
◆தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
◆கல்வித்துறையை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்
◆நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
◆கல்லூரி மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும்
◆தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்
◆மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்
◆மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்
◆கார்பரேட் நிறுவனங்கள் புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்
◆கார்பரேட் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதிய சட்டம் கொண்டு வரப்படும்
◆மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம் கைவிடப்படும்
◆சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும்
◆பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
◆விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்
◆பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தில் பழைய நடைமுறை கொண்டு வரப்படும்
◆மத்திய நிதிக்குழு மாநில மன்றத்தில் வரையடுக்கப்பட வேண்டும்
◆தொழிலாளர் ஓய்வூதியம் ரூ.8000 ஆகி நிர்ணயம் செய்யப்படும்
◆பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய வல்லுநர்கள் குழு அமைக்கப்படும்
◆பெட்ரோல், டீசல் பொருட்களின் விலை பழைய முறைப்படி நிர்ணயம் செய்யப்படும்
◆தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்க புதிய சாலை பணியாளர்கள் நியமனம்
◆10ம் வகுப்பு வரை படித்த கிராமப்புற பெண்கள் மக்கள் நல பணியாளராக நியமிக்கப்படுவர்
◆சிறு தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும்
◆முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்
◆முறைகேடான சுங்க கட்டணம் ரத்து செய்யப்படும்
◆கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும்
◆திருச்சி, மதுரை, கோவை, சேலத்தில் மெட்ரோ கொண்டு வரப்படும்
◆கீழடியில் ஆய்வு தொடங்கி அருங்காட்சியகம் அமைக்கப்படும்
◆கஜா போன்ற பேரிடிகளுக்காக தனி நிதி ஒதுக்கப்படும்
◆இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்
◆சமூக ஊடகங்கள் வெளியிடும் ஆபாச செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
◆100 நாட்கள் வேலையில் குறைந்தபட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை 150 அதிகரிக்கப்படும்
◆மதங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
◆கேபிள் டீவி கட்டணம் மீண்டும் குறைக்கப்படும்
◆பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
◆நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டு இருக்கிறது.