Saturday, February 7, 2026

அதிரையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் வட நாட்டு ஊழியர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் பல்வேறு பணிகளுக்காக பீஹார் உத்திரப்பிரதேசம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிரையில் பணி புரிந்து வருகின்றனர்.

இவர்கள் சேர்மன்வாடி,கடைதெரு,பழஞ்செட்டி தெரு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கி உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வேளையில்லாமல் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.

அரசு,மற்றும் தன்னார்வலர்கள் உதவி வந்த நிலையில் இவர்களை தனி ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்ப அரசு பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு உள்ளது.

அதன் படி இன்று மாலை கிராம நிர்வாக அலுவலர் அஜாருதீன் தலைமையில், முதற்கட்டமாக கணக்கெடுப்பு பணி துவங்கியது.

இதில் பெயர் ஆதார் எண் உள்ளிட்டைவைகள் சரிபார்க்கப்பட்டு தொழிலாளர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

இதுகுறித்து எம்மிடம் தெரிவித்த கிராம நிர்வாக அதிகாரி, இன்னும் சில நாட்களில் சென்னைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் அங்கிருந்து மத்திய அரசு இயக்க உள்ள சிறப்பு இரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கபடுவார்கள் என தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img