அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில கையகப்படுத்தல்: உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூட நிலத்தை நகராட்சி சொத்தாகக் கருதி கையகப்படுத்தும் பணியை 2024-ல் தொடங்கியது. இதற்கு எதிராக பள்ளி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
பொதுமக்கள் ஆதரவில் போராட்டங்கள் நடைபெற்றதால் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், நகராட்சி சமீபத்தில் பணியைத் தொடங்கியது.
இன்று (டிசம்பர் 19, 2025) காலை அமினா முன்னிலையில் நிலத்தை கையகப்படுத்தி, பொருட்களை அகற்றும் நடவடிக்கையின்போது மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டது.
முன்னதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முஸ்லீம் லீக் மாநாட்டில் இந்த விவகாரத்தில் பள்ளிக்கு ஆதரவாக பேசியது சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.








