Tuesday, March 24, 2026

தஞ்சை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
புதுப்பட்டினம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான மணற் சிற்பங்களை உருவாக்கினர்.

இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், 2026 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் சிரமமின்றி வாக்களிக்க தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டு, போலீஸ் மற்றும் தேர்தல் பணியாளர்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர் சேர்த்தல், வாக்குச்சீட்டு சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்களிப்பவர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

பொதுமக்கள் அச்சமின்றி, சுதந்திரமாகவும் ஜனநாயகக் கடமையாகவும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி...

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img