Friday, March 27, 2026

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

127 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளராக, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரான சி.வி. சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூரை சேர்ந்த சி.வி. சேகர், ஏற்கனவே 2016 முதல் 2021 வரை பட்டுக்கோட்டை தொகுதியின் எம்எல்ஏவாக தேர்த்தெடுக்கப்பட்டு பணியாற்றவர். அதிமுகவில் பட்டுக்கோட்டை முன்னாள் நகர் மன்ற தலைவர் ஜவகர்பாபு, மாநில அமைப்பு செயலாளர் கல்யாணஓடை செந்தில் உள்ளிட்ட பலரும் சீட் பெறுவதற்கு காய் நகர்த்தி நிலையில், தற்போது சி. வி. சேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img