Monday, April 6, 2026

அதிராம்பட்டினத்தில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு – கிராமமே சோகம்.

spot_imgspot_imgspot_imgspot_img


அதிராம்பட்டினம் அருகே மின்னல் தாக்கியதில் 65 வயது மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (65) இன்று காலை வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தார்.

அப்போது கோடை மழையுடன் கூடிய பலத்த இடி, மின்னல் ஏற்பட்டது. இதில் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவருக்கு கமலா என்ற மனைவியும், முத்துக்குமார், முத்துராஜா, முத்துரேகா ஆகிய மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் மஞ்சுளா தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி மீனவர் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு...

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி...

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்! ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு!

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர வாக்கு...

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக...

​அதிராம்பட்டினம்: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர். ​சர்ச்சையின்...
spot_imgspot_imgspot_imgspot_img