Thursday, February 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. பலர் வீடுகளை இழந்தும், இருக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துவிட்டனர். புயலால் மீனவர்களின் படகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், ராமர் கோயில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

அப்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்த தாங்கள் அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் ஸ்டாலினிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். இச்சந்திப்பின்போது தமிழ்நாடு மீனவர் நலச்சங்க மாநில செயலாளர் A.K. தாஜுதீன், அஹமது கபீர், இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img