Sunday, February 1, 2026

மல்லிப்பட்டினத்தில் பதுக்கப்படும் நிவாரண பொருட்கள் ?

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த மாதம் 15ம் தேதி நள்ளிரவில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப்போட்டு சென்றது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவித்தனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்திற்கு அரசின் சார்பில் நிவாரண பொருட்கள் வெறும் 600 குடும்ப அட்டைகளுக்குமட்டுமே வந்துள்ளது. ஆனால் அங்கு 1100 குடும்ப அட்டைகள் உள்ளன.

அவ்வாறு வந்த அந்த நிவாரண பொருட்கள் அரசின் புயல் பாதுகாப்பு மையத்தில் கடந்த 15 நாட்களாக வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 15 நாட்களாக மக்களுக்கு வினியோகிக்கப்படாமல் இருந்த அந்த பொருட்களை நேற்று அங்கிருந்து வேறொரு இடத்திற்கு அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.

இவ்விஷயம் அறிந்த பொதுமக்கள் உடனே அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த முற்றுகையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.டி.கே. பஷீர், மல்லிப்பட்டினம் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளை சந்தித்து , இந்த நிவாரண பொருட்களை விரைந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

புயலடித்து ஒரு மாதங்களுக்கு மேலாகியும் அரசின் நிவாரண பொருட்கள் இன்னமும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படாமல் பதுக்கப்படுவது பொதுமக்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரிகள் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பார்களா ? பொறுத்திருந்து பார்க்கலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img