Sunday, February 1, 2026

இஸ்லாத்திற்கு எதிராக தொடர்ந்து விஷம கருத்துக்களை பரப்பி வந்த பாஜக ஆதரவாளர் கல்யாணராமன் கைது !

spot_imgspot_imgspot_imgspot_img

பாரதிய ஜனதா கட்சியில் இருந்தவர் கல்யாணராமன். இவர் காக்கைச் சித்தர் கல்யாணராமன் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் உள்ளார். இவர் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கல்யாணராமன் மீது பல புகார்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (சைபர் கிரைம் ) போலீசார் கல்யாணராமன் ஃபேஸ்புக்கை பார்த்து புகாரை உறுதி செய்து கொண்டு, கல்யாணராமன் மீது 153ஏ, 295, 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.

இன்று காலை அகமதாபாத்திலிருந்து விமானத்தில் சென்னை திரும்பிய கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை காவல் ஆணையா் அலுவலகம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்யாணராமன், பாஜக சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் மற்றும் தி.மு.கவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். மேலும், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களை ஒருமையிலும் விமர்சனம் செய்துபதிவிட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img