Friday, March 13, 2026

கோவை அருகே மகளை வேட்டையாடிய மிருகம் – போக்சோ சட்டத்தில் கைது !

spot_imgspot_imgspot_imgspot_img

கோவை மாவட்டம், பூலுவம்பட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (35). இவர் லோடுமேன் ஆவார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆயா வேலை பார்த்து வருகிறார்.

இருவரும் 13 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களது மகள், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு , மனைவி வேலைக்கு சென்று விட, மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தவரை அவரது தந்தை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். அவரது மனைவிக்கு தெரியாமல் இது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

வயிற்று வலி என கூறிய மகளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மகள் கர்ப்பமாக இருப்பதாக அறியப்பட்டது.

இதுகுறித்து சிறுமியிடம் கேட்டதில் தந்தைதான் இதற்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் , பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்துள்ளனர்.

ஏற்கெனவே செல்வபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தந்தை மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இணைந்து சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவத்தில் இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img