Sunday, February 1, 2026

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது ~ உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் தங்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அதனால் ஆலையை மூட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடுவதாக அரசாணை வெளியிட்டது.

தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை, ரத்து செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.

அதில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து, தமிழக அரசின் உத்தரவு செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது. இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட சொல்லி அரசாணை பிறப்பித்தது செல்லுபடியாகும். தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அரசியலமைப்பின் நீதிமன்றங்களில் மட்டுமே விசாரிக்க முடியும். எனவே உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் போன்றவற்றில் மட்டும்தான் இது தொடர்பாக விசாரணை நடத்த முடியுமே தவிர, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசுக்கு எதிரான உத்தரவை விசாரிக்க முடியாது. எனவே தமிழக அரசு அல்லது, வேதாந்தா குழுமம் இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றத்தைதான், அணுக வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img