Monday, February 2, 2026

திருப்பூர் சாலையில் திமுக பிரமுகரை விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்த கும்பல் !

spot_imgspot_imgspot_imgspot_img

திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். திமுக மாணவரணி அமைப்பில் இருந்தவர். கல்லூரி சாலையில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தார். அதனால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் உட்பட நிறைய பேருக்கு வட்டிக்கு பணம் அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கல்லூரி சாலையில், ஐயப்பன் கோயில் அருகே சாலையில் பாலமுருகன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் 3 பேர் வந்தனர்.

அவர்கள் கைகளில் அரிவாள் உட்பட பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருந்தனர்.

திடீரென பாலமுருகனை வழிமறித்து அவர்கள், சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பாலமுருகன், அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், விரட்டி விரட்டி அந்த கும்பல் வெட்டி சாய்த்தது. இதில் நிலைதடுமாறி ரோட்டிலேயே ரத்தம் சொட்ட சொட்ட சரிந்து விழுந்தார்.

இவ்வளவும் பொதுமக்கள் கண்முன்னாடியே நடந்தது. இதையடுத்து, அந்த கும்பல் பைக்கில் ஏறி அவிநாசி சாலை வழியாக தப்பி சென்றுவிட்டனர். தகவலறிந்து வடக்கு போலீஸார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணையில் இறங்கி உள்ளனர். பரபரப்பான சாலையில், திமுக பிரமுகரை வெறி கொண்டு பழிதீர்த்த கும்பல் யார் என்று தெரியவில்லை.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img