Monday, February 2, 2026

பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்.. பிரசவலியால் துடித்து கர்ப்பிணி பெண் பலியான கொடூரம் !

spot_imgspot_imgspot_imgspot_img

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட போது , நடுவழியில் பெட்ரோல் இல்லாமல் ஆம்புலன்ஸ் நின்றதால் பரிதாபமாக இறந்து போனார். இந்த துயரமான சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.

ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தரஞ்சன் முண்டா. இவரது மனைவி துளசி முண்டா. நிறைமாத கர்ப்பிணியான இவர் வெள்ளிக்கிழமை இரவு பிரவ வலியால் துடித்துள்ளார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் துளசி முண்டாவை அருகில் பங்கீர்பூசி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உடனடியாக உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி பர்பிடாவில் உள்ள பண்டிட் ரகுநாத் முர்மா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைத்தனர்..
ஆனால் அந்த நேரத்தில் மனைவியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் சித்தரஞ்சன் தவித்து இருக்கிறார். அவசர அழைப்பு தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் எந்தவித உதவியும் அவருக்கு கிடைக்காமல் போனது.

இதனால் தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்த சித்தரஞ்சன் , கர்ப்பிணி மனைவி துளசியை அழைத்து கொண்டு பர்பிடா நகரை நோக்கி சென்றார். ஆனால் கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ், எரிபொருள் இல்லாமல் நடுவழியில் நின்று கொண்டது. இதனால் அடுத்த ஆம்புலன்ஸ் வருவதற்கு 45 நிமிடம் தாமதம் ஆகியது. இந்த இடைப்பட்ட நேரத்தில் வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணான துளசி முண்டா பரிதாபமாக இறந்து போனார்.

இது தொடர்பாக துளசி முண்டாவின் கணவர் சித்தரஞ்சன் முண்டா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆம்புலன்ஸ் எரிபொருள் இல்லாமல் நடுவழியில் நின்று கொண்டது. இதனால் செவிலியர்கள் மற்றொரு ஆம்புலன்ஸை அழைத்தனர். அந்த ஆம்புலன்ஸ் வருவதற்கு 45 நிமிடம் தாமதம் ஆனது. சுமார் ஒரு மணி நேரம் கடந்து என் மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் என் மனைவி இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர்” என வேதனையுடன் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img