Saturday, March 21, 2026

காலால் செல்ஃபி எடுத்த மாற்றுத்திறனாளி சிறுவன்… சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்த கேரள முதல்வர் !

spot_imgspot_imgspot_imgspot_img

கேரளா முதல்வர் பினராயி விஜயன் மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வித்தியாசமான திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறார். கேரளாவை ஆட்சி செய்த முதல்வர்களில் மிகவும் சிறப்பானவர் என்று இவரை பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.

கேரளாவில் மழை வெள்ளம் வந்த போது மக்கள் இவருக்கு பெரிய ஆதரவு தந்தனர். அப்போது இவர் செய்த பணிகள் எல்லாம் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயனை மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவர் இன்று சந்தித்தார். கேரளா வெள்ளத்திற்காக அவர் நிதி உதவி வழங்கினார். முதல்வரின் தனிப்பட்ட நிவாரண நிதிக்கு அவர் பணம் கொடுத்தார்.

இந்த நிதி உதவி வழங்கிய சிறுவனுக்கு கைகள் இல்லை. இதனால் அவர் தன்னுடைய கால்கள் மூலம் இந்த பணத்தை கொடுத்தார். அதோடு இவர் தன்னுடைய காலால் முதல்வர் பினராயி விஜயன் உடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

முதல்வர் எந்த விதமான பந்தாவும் இன்றி அந்த சிறுவன் காலால் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டார். அதோடு, காலால் எடுக்கும் செல்பியில் சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img