Monday, February 2, 2026

இமாலய சரிவில் இந்திய பொருளாதாரம் !

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. ஆனால் இந்த பொருளாதார சரிவு இப்போதைக்கு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி மோசமான சரிவை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது.

அதுவே 6 ஆண்டுகளில் மிக குறைவான ஜிடிபி ஆகும். தற்போது 8 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த வருடம் இதே இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 6.9% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வருடம் மோசமான வீழ்ச்சியை அடைந்துள்ளது.

கடைசியாக 2012-13 ஜனவரி மார்ச் காலாண்டில் 4.3% ஆக ஜிடிபி இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. அதேபோல் 8 மூல நிறுவனங்களின் உற்பத்தியும் 5.8% ஆக குறைந்துள்ளது.

பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையே கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். இதே குற்றச்சாட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் முன்வைத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img