Monday, February 2, 2026

ப்ரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதே பகுதியில், எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த மற்றொரு பெண் சடலம் !

spot_imgspot_imgspot_imgspot_img

மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் சடலமும் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத்தில் ப்ரியங்கா ரெட்டி என்ற கால்நடை மறுத்துவர் இரு தினங்களுக்கு முன்பு லாரி ஓட்டுநர்கள் மற்றும் க்ளீனர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், குற்றவாளிகள் 4 பேரை தெலங்கானா காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

ப்ரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியே அடங்காத நிலையில், அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் எரிக்கப்பட்ட உடல் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரியங்கா கொலை செய்யப்பட்ட ஷம்ஷாபாத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றியுள்ளனர்.

அந்த பெண், ப்ரியங்காவை போலவே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா? பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருப்பதால், ப்ரியங்காவை கொன்றவர்களே இந்த பெண்ணையும் கொன்றிருக்கலாமா? என்ற சந்தேகங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ப்ரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாகவே மற்றொரு பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் அதே பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img