Monday, February 2, 2026

என்ன நடந்தாலும் குடியுரிமை சட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.. முடிந்ததை பாருங்கள்.. மமதா பானர்ஜி சவால் !

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மசோதாவிற்கு எதிராக நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக மக்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது மேற்கு வங்க முதல்வரும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, என்ன நடந்தாலும் எங்கள் மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அனுமதிக்க மாட்டோம். என்ஆர்சி சட்டத்தையும் எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம். வடகிழக்கு மாநிலங்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

காவி கட்சி நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது. அவர்களால் எங்கள் மாநிலத்தை துண்டு போட முடியாது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு மாநில நலன்தான் முக்கியம். பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேறி இருக்கலாம்.

ஆனால் எங்கள் மாநிலத்திற்கு இதை அனுமதிக்க மாட்டோம். மேற்கு வங்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். எங்கள் நாட்டில் மக்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பார்கள். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன் .

இந்த சட்டத்திற்கு எதிராக திரிணாமுல் கட்சி போராட்டம் நடத்தும். வரும் 16-18 தேதிகளில் மாநிலம் முழுக்க நாங்கள் போராட்டம் நடத்துவோம். இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் இப்படி மக்களை பிரித்து மோசமாக ஆட்சி நடத்துவீர்கள் என்று மமதா பானர்ஜி பாஜக அரசை சரமாரியாக விமர்சித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img