Saturday, September 13, 2025

கண்,கால் செயலிழந்த அதிரை சகோதரிக்கு தாராளமாய் உதவுவீர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்தவர் ஜஃபருல்லாஹ். கடந்த இரண்டாண்டுக்கு முன்னர் கிட்னி செயலிழப்பால் காலமாகிவிட்டார்.

முன்னதாக இவருக்கும் பேராவூரணியை சேர்ந்த ஜரினா (வயது 38) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடிந்து அதிரையில் நல்ல முறையில் வாழ்ந்து வந்தனர்.

ஜபஃருல்லாஹ், ஜரினா தம்பதியருக்கு முர்ஷிதா (வயது 9), முஃபீதா (வயது 7) என்ற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

கணவன் இறந்த பின்னர் அக்கம் பக்க வீடுகளில் வேலை செய்து தாமும் பிள்ளைகளும் பசி தீர்த்து வந்த நிலையில், கடந்த மாதம் திடீரென ஜரினாவிற்கு கண் பார்வை பறிபோயின.

இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நமதூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். போதிய பொருளாதார வசதியின்மையால் சிகிச்சையை தொடரவில்லை.

இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் இடுப்புடன் செயலிழப்பு ஏற்பட்டு மிகவும் கஷ்டமான சூழலில் இவர்கள் மூவரின் வாழ்வும் நகர்ந்து கொண்டுள்ளது.

எனவே தாராள குணம் கொண்ட அதிரையின் தனவந்தர்கள் தாராளமாய் நிதியுதவி செய்து இந்த சகோதரியின் மேல் சிகிச்சைக்கு உதவிட வேண்டுகிறோம்.

(இந்த பதிவு நேரில் ஆய்வு செய்தபின் வெளியிடப்பட்ட 100℅ உண்மையான தகவல்)

BANK ACCOUNT DETAILS :

Name : SHAIK NASURUDEEN
Bank : State Bank Of India
Branch : Adirampattinam
AC. No. : 20365845604
IFSC Code : SBIN0014370
Phone : 9043311441 / 9944426360 / 7845159434

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி...
spot_imgspot_imgspot_imgspot_img