41 




அதிரையில் தமுமுகவினர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்!
பரவிவரும் கொரானாவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு கபசுர குடி நீர் அருந்த அறிவுரை வழங்கியது.
இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கபசுர குடிநீர் கபம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகள் குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதனடிப்படையில் நகர தமுமுகவின் புதிய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்.
இதனை மாநில துணைத்தலைவர் அஹமது ஹாஜா துவக்கி வைத்தார்.
சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் கபசுரக் குடிநீர் வழங்கியது குறிப்பிடதக்கது.




