Saturday, December 13, 2025

என் வாழ்க்கையை மாற்றிய வாட்ஸ்அப்! அதிரையரின் மகத்தான அனுபவம்!

spot_imgspot_imgspot_imgspot_img

ஒருநாள் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் சொன்னார், என்ன பாய் முக்கியமான மெசேஜ் வாட்ஸ் அப் பண்ணுனேன் பார்க்கவே இல்லை..! உடனே, ப்ரோ வாட்ஸ்அப் மெசேஜ் அதிகம் வந்ததுனாலே பார்க்க முடியவில்லை என்றேன். அவர் சற்றும் தாமதிக்காமல் individual மெசேஜ் கூட பார்க்க முடியவில்லை என்றால் உங்களுக்கு எதுக்கு சார் வாட்ஸ்அப் என காட்டமாக கேட்டார். உண்மையில் அவர், எனக்கு அனுப்பியிருந்த மெசேஜ் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது தான்.

வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிக மெசேஜ் வந்திருந்ததால் அந்த நண்பர் அனுப்பியதை பார்க்க முடியாமல் போயிற்று. இருப்பினும் பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.

பின்னர் சற்றும் தாமதிக்காமல் எனக்கு எது தேவை! எது தேவை இல்லை என வாட்ஸ்அப் க்ரூப்களை வகைப்படுத்தினேன். இதற்கு நான் வைத்த அளவுகோல் சாதாரணமானது. தினந்தோறும் தகவல்களை படிக்கும் க்ரூப்கள் தேவையானது, நோக்கமும் தனித்துவமும் இல்லாத க்ரூப்களை தேவையற்றது என்றும் பிரித்து, அந்த தேவையற்ற க்ரூப்களை விட்டு வெளியேறினேன்.

இவ்வாறு செய்த சில நாட்களிலேயே வாட்ஸ்அப்பின் பயன்பாடு புரிய ஆரம்பித்தது. எனக்கு வரும் அனைத்து தகவல்களையும் படித்தேன்.. பார்த்தேன்… வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் நேரமும் குறைந்தது.

அலுவலக பயன்பாடு தவிர்த்து இரத்தம் தேவை தொடர்பான பதிவுகளுக்கு அளித்த முக்கியத்துவம், பலரின் உயிரை காக்க உதவியது என்பது மன ஆறுதல்.

உண்மையில் தனித்துவமற்ற வாட்ஸ்அப் க்ரூப்களில் இருந்து வெளியே வந்த நாள் முதல், இன்று வரை எனக்கு வரும் வாட்ஸ்அப் தகவல்களை படித்து அனைத்திற்கும் பதில் அளிக்கிறேன். நாட்களும் பயனுள்ளதாக கழிகிறது.

-இக்லாஸ்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img