Thursday, March 19, 2026

தமிழக-கேரள எல்லையில் வெடிபொருட்கள் கடத்தல்: பிரபு,ரவி என்ற இரண்டு ஆசாமிகள் கைது !

spot_imgspot_imgspot_imgspot_img

கேரளா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் அங்குள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சேலத்திலிருந்து தக்காளி ஏற்றி வந்த மினி லாரியை போலீசார் தடுத்தி நிறுத்தினர்.

அப்பொது அதில் நடத்திய  சோதனையில், லாரியில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மினி லாரியை ஓட்டி வந்த பிரபு, ரவி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் அனுமதியின்றி சட்ட விரோதமாக சேலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலுவாவிற்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 7,500 டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஜெலட்டின் குச்சிகள் எதற்க்காக எடுத்து செல்லப்பட்டது நாச வேளைகளில் பயன்படுத்த இந்த வெடிபொருட்க்கள் எடுத்து செல்லப்பட்டனவா என்ற கோனத்தில் விசாரனை நடத்திட வேண்டும் என கேரள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img