103
தியாகராஜரின் ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு விடப்படுவதாக மாவடட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்து உள்ளார். திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள் முக்தி அடைந்த காவிரி ஆற்றங்கரையில் 176 ஆராதனை விழா இன்று வெகு விமர்சையாக தொடங்கியது..
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள ஆணையில், தஞ்சை மாவட்டத்துக்கு வரும் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டு உள்ளார் இந்த விடுமுறையை ஈடுசெய்ய வரும் 21-ஆம் தேதி மாற்று வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.