மத்திய அரசின் 3 புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதரம் நாசமாகும்; கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆதாயம் அடையும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக டெல்லியை பல லட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதற்கு வழு சேர்க்கும் முகமாக அதிராம்பட்டினத்தில் அனைத்து கட்சி கூட்டம் (அதிமுக-பாஜக தவிர்த்து) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சிகள் ஒருமனதாக நாளை நடக்கும் போராட்டத்திற்க்கு ஆதரவு அளித்தனர்.
இதுகுறித்து வர்த்தக சங்க பொற்ப்ப்பாளர்கள் நாளைய போராட்டத்தில் தார்மீக அடிப்படையில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் தலைமையில் கூட்டனி கட்சி பிரமுகர்கள் கடை அடைப்பிற்க்கான தகவலை வியாபாரிகளுக்கு தெரிவித்தனர்.
இப்போராட்டம் வெற்றியடைய பொதுமக்களும் ஒத்துழைத்து நாசகார சட்டம் அகல பாடுபட வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர்.








