Friday, March 27, 2026

அதிரையில் பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி, பெற்றோர்கள் ஒப்புதலை பெற்று செலுத்த வேண்டும் !

spot_imgspot_imgspot_imgspot_img

சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்ற சுகாதார அதிகாரிகள்-

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இதனால் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்ட அரசு அடுத்தப்படியாக 18வயதிற்கு உட்பட்ட பள்ளி கல்லூரி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியது.

அதன்படி அதிராம்பட்டினம் அரசு உதவி பெறும் பள்ளியில் இன்றுகாலை மாணவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனையறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் சுகாதார அதிகாரியிடம் விளக்கம் கேட்டனர்.

முறையாக பெற்றோர்களிடத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், சுகாதாரத்துறை நீதிமன்ற வழிகாட்டுதலில் யாருக்கும் ஊசி செலுத்த கட்டாயப்படுத்த கூடாது என அதில் கூறப்பட்டு உள்ளன.

ஆனால் அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது நியாயமற்றது.

முன்னதாக தமுமுக மாநில செயலாளர் அஹமது ஹாஜா பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு சட்ட வழிமுறை குறித்த ஒரு கடிதம் வழங்கியுள்ளார்.

இருப்பினும் இன்றுகாலை தொடங்கிய தடுப்பூசி முகாமுக்கு சென்ற சமூக ஆர்வலர்கள் சிலர் பெற்றோர் ஒப்புதலுக்கு பின்னர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்து முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பள்ளிக்கூட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்ய்ப்பட உள்ள பெற்றோர்கள் கலந்தாய்வுக்கு பின்னர் முகாம் நடத்த இருப்பதாகவும், விருப்பமுள்ள மாணவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img