Sunday, February 1, 2026

அமீரகத்தின் EV HAXA மின்சார வாகன அறிமுக விழா – முதல் வாகனத்தை GK வாசன் பெற்று கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img
ஹக்‌ஷா நிறுவனத்தின் இருசக்கர மின்சார வாகனத்தின் கோலாகல அறிமுக விழா- தமாக தலைவர் ஜிகே வாசன் முதல் வாகனத்தை பதிவு செய்து விற்பனையை துவக்கி வைத்தார்.

சென்னை-துபாய் உள்ளிட்ட பெருநகரங்களில் இயங்கி வரும் அலெக்ரியா ஹாலிடேய்ஸ் நிறுவனம் பல்வேறு துறைகளை கால் பதித்து சேவையாற்றி வருகிறது.

அதன் வரிசையில் மாசில்லா இந்தியா என்ற திட்டத்தின் கீழ் அமீரக்கத்தின் பிரசித்தி பெற்ற, EV ஹக்சா என்ற மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் சென்னையில் உள்ள அலெக்ரியா ஹாலிடேய்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியா முழுவதுக்குமான விற்பனை உரிமையை பெற்றுள்ளது.

இவ்வாகன அறிமுகம் மற்றும் முதல் விற்பனை துவக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது.

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான GK வாசன் கலந்துகொண்டு முதல் வாகனத்தை பதிவு செய்து பெற்று கொண்டார்.

முன்னதாக பேசிய அவர்,மின்சாதன வாகனங்களில் தேவை இன்னும் 5ஆண்டுகளில் 40 சதவீத இலக்கை அடையும் என்றும், முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

மின்சாரம் சார்ந்த வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளித்து மானியங்கள் அளிக்க முன் வந்துள்ளது என்றும் எல்லாவற்றையும் முந்தி செயல் படுத்தும் அமீரகம் முந்தி கொண்டுள்ளதாகவும், அமீரகத்தின் உற்பத்திகள் தரமானதாகவும்,திறன் கொண்டதாகவும் இருக்கும் என்பதால்தான் நான் முதல் வாகனத்தை புக் செய்து வாங்கி உள்ளதாக தெரிவித்தார்.

இதன் ஒருபகுதியாக அமீரக ஹக்‌ஷா நிறுவன பிரதிநிதி சலீம் பின் அவாத் அல் காதிரி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஒன்றிணைந்து முதல் வாகன விற்பனையை துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் அலெக்ரியா ஹாலிடேய்ஸ் நிர்வாக இயக்குனர் நெய்னார் ராவூத்தர், ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன், மஜக செயலாளர் ஹாரூன் ரஷீத், உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள்,சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஊடகத்துறை நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியை சின்னத்திரை இயக்குனர் ரக்‌ஷிதா தொகுத்து வழங்கினார்.
பல்வேறு மாவட்ட விற்பனை பிரதிநிதிகளுக்கு, சிறப்பு செய்யப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img