Wednesday, March 18, 2026

‘உஷார் மக்களே’… செல்போன் பழுது நீக்க கொடுத்ததில் ரூ.2.2 லட்சத்தை இழந்த நபர்!

spot_imgspot_imgspot_imgspot_img

மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போனை பழுது நீக்க கொடுத்தவர் வங்கி கணக்கிலிருந்து, ரூ.2.2 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கதம் (40) என்ற நபர் தெரிவித்ததாவது, “சமீபத்தில் செல்போன் ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை என செல்போன் சரி செய்ய செல்போன் கடையில் கொடுத்தேன். அப்போது, கடைகாரர் செல்போனை சிம் கார்டுடன் கொடுத்துச் செல்லும்படி கேட்டார். நானும் சிம் கார்டுடன் செல்போனை கொடுத்துச் சென்றேன். மறுநாள் செல்போனை திரும்பப் பெற சென்ற போது கடை மூடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்தும் பல நாள்கள் செல்போன் கடை மூடப்பட்டிருக்க, அதன் பிறகே எனது வங்கிக்கணக்கை சோதித்தேன். அப்போதுதான் எனது செல்போன் எண்ணை வைத்து பணம் மற்றொரு வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, உடனே காவல்துறையிடம் புகார் அளித்தேன். தற்போது பணம் மாற்றப்பட்ட மற்றொரு வங்கி கணக்கின் எண்ணை வைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

source : vikatan

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img