Friday, March 20, 2026

அதிரையில் IMMK சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா!

spot_imgspot_imgspot_imgspot_img

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து சமுதாயத்திற்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று முன்தினம் 03/01/25 வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளராக ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் செ. ஹைதர் அலி கலந்துகொண்டு புதிய ஆம்புலன்ஸை அர்ப்பணிப்பு செய்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் திருப்பூர் ஹாலிதீன், மாநில துணைத்தலைவர் O.M.A முஷாஹுதீன், மாநில துணைப் பொதுச்செயலாளர் மஞ்சக்குடி பாபு, மாநில செயலாளர் அதிரை அகமது ஹாஜா, மாநில தொண்டரணி செயலாளர் முகமது ரபீக், மாநில இளைஞர் அணி பொருளாளர் முகமது ரஹ்மானுதீன், மாநில மருத்துவ சேவை அணி துணைச் செயலாளர் நூர் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள், பொதுமக்கள், ஜமாத்தார்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய ஆம்புலன்சில் ICU , வென்டிலேட்டர் , மானிட்டர் என நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.இந்நிகழ்ச்சியை அதிராம்பட்டினம் நகர நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அதிரை IMMK-வின் அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் தொடர்பு எண் – 8680808095

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img