Wednesday, March 25, 2026

பிப்.20ல் அதிரை பேரூராட்சியை கண்டித்து மாபெரும் சாலை மறியல் போராட்டம்..,பொதுமக்களுக்கு அழைப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மயான பூமி மீட்பு இயக்கம் சார்பில் பிப்.20ஆம் தேதி காலை 09:00மணிக்கு வண்டிப்பேட்டை சந்திப்பு அருகே மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவுசெய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரையில் இருந்து மதுக்கூர் செல்லும் வழியில் இந்து சமய மக்களுக்கான பொது மாயணத்தை சுமார் 10ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கிடங்காக அதிரை பேரூராட்சி சார்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இங்கு ஊர் முழுவதும் அல்லப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி பல நோய்கள் பரவும் அபாயமும்.,இனி வரும் காலங்களில் மாயணத்தை அடக்கம் செய்ய பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் விதத்திலும், மாயணத்தை மீண்டும் உபயோகிக்கும் விதத்திலும் சுத்தம் செய்து தரக்கோரியும், அதிரை பேரூராட்சியின் இந்நிலையை கண்டித்தும் மாபெரும் சாலை மறியல் போராட்டம் அந்த மயான பூமி மீட்பு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் சாதி மத வேறுபாடு இன்றி கலந்துகொள்ளும் படி அந்த இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img