Thursday, March 26, 2026

உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. கைது!!

spot_imgspot_imgspot_imgspot_img

உனாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லம் முன் அந்த பெண் தீக்குளிக்க முயன்றார். இந்த நிலையில், போலீஸாரால் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து எம்எல்ஏவின் சகோதரர் அதுல் சிங் செங்காரை போலீசார் கைது செய்தனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீது 3 வழக்குகளை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், நேற்று காலை முதல் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் அறிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img