ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சட்டிஸ்கர் மற்றும் மிஸோரம் மாநில சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 12ம் தேதி முதல் கட்ட தேர்தலை சட்டிஸ்கர் சந்திக்கிறது. நவம்பர் 20ம் தேதி 2வது கட்ட தேர்தல் நடைபெறும். நவம்பர் 28ல் மத்தியபிரதேசம் மற்றும் மிஸோரம் தேர்தல் நடைபெறும். தெலுங்கானாவுக்கு டிசம்பர் 7 தேர்தல் நடைபெறும். அதே நாளில் ராஜஸ்தானுக்கும் தேர்தல் நடைபெறும்.
தேர்தல் அட்டவணை இதுதான்:
18 தொகுதிகளுக்கு சட்டீஸ்கரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் அக்டோபர் 16ம் தேதி தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக். 23. பரிசீலனை 24ம் தேதி. வாபஸ் பெற அக். 26 கடைசி நாளாகும். முதல்கட்ட தேர்தல் நவ. 12ல் நடைபெறும். சட்டீஸ்கரில் 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவ. 2ல் துவங்கும். வேட்புமனு வாபஸ் பெற 5ம் தேதி கடைசி நாள். தேர்தல் நவ. 20ல் நடைபெறும்.
மத்திய பிரதேசம் மற்றும் மிசோராமில் நவம்பர் 28ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் டிசம்பர் 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ம் தேதி நடைபெறும். தலைமை தேர்தல் ஆணையர் ராவத் டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது இந்த தகவலை தெரிவித்தார்.