Thursday, March 19, 2026

மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அதிரை AYFA அணியினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

2018-2019க்கான மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் தஞ்சாவூர் மாவட்டம் அடுத்துள்ள வெளிவயலில் கபாடி,கால்பந்து மற்றம் கைப்பந்து போட்டி இன்று காலை முதல் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமத்தை சார்ந்த பல்வேறு அணிகள் கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இதில் அதிரை சார்ந்த WFC, AYFA, AFFA ஆகிய அணிகள் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இதில் பீச் கைப்பந்து போட்டியில் WSC அணியினை சார்ந்த அஸ்லம்,இர்ஃபான் ஆகிய இருவரும் கும்பகோணம் அணியினரிடம் மோதி முன்றாம் இடத்தை தட்டி சென்றனர்.

அதே போல் கால்பந்து போட்டியில் அதிரையை சார்ந்த WFC, AFFA, AYFA அணியினர் விளையாடினர். இந்நிலையில் இறுதி ஆட்டததில் AYFA மற்றும் WFC அணியினருக்கு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் AYFA அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் WFC அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். அதுமட்டுமின்றி இப்போட்டியில் வென்றதன் மூலம் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கும் தகுதி பெற்றனர்.

அதே போல் கபாடி போட்டியில் கலாமின் கனவுகள் கொள்ளுக்காடு அணியினம் வெளிவயல் அணியினரும் இறுதி ஆட்டம் விளையாடினர். இதில் கலாமின் கனவுகள் கொள்ளுக்காடு அணியினர் வெற்றி பெற்றனர்.

இறுதியில் வெற்றி பெற்ற அணியினருக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற அணியினர்களுக்குழு அதிரை எக்ஸ்பிரஸின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img