Saturday, March 28, 2026

மக்களிடம் வாக்குகளை பெற கருப்பு பணத்தை பயன்படுத்துகிறார் மோடி – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு !

spot_imgspot_imgspot_imgspot_img

நடைபெறும் மக்களவை தேர்தலில் மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பணத்தை பயன்படுத்தி வருகிறார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கடும் சவால் கொடுத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னர் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து கொல்கொத்தாவில் மாபெரும் பேரணியையும் மாநாட்டையும் நடத்தி காண்பித்தார். அந்த பேரணியிலும் மாநாட்டிலும் பாஜகவுக்கு எதிரான மன நிலையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்தன.

காங்கிரசும் அந்தப் பேரணியிலும் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டது. ஆனால் அந்த ஒருங்கிணைப்பு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் கூட்டணியாக மாறவில்லை. அதே போன்று மேற்கு வங்க மாநிலத்தில் சி.பி.ஐ ஐ அனுமதிக்க முடியாது என்று தீவிரமாக மறுத்தார் மம்தா, அதன் பின்னர் யோகி ஆதித்ய நாத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க முடியாது என்று தடை விதித்தார்.

இப்படி அதிரடி காண்பித்து வரும் மம்தா சில நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் அதாவது சீரோ தான் கிடைக்கும் என்று கிண்டலடித்தார். நேற்று முன்தினம் மேற்குவங்க மாநிலம் சேராம்போர் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட மம்தா மக்களவை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவ போவது நிச்சயம். அது பாஜகவுக்கும், மோடிக்கும் நன்கு தெரிந்து விட்டது. ஆகவே தோல்வியை தழுவுவதை தவிர்க்க பல முறைகேடுகளை பாஜகவும், மோடியும் கையாண்டு வருகிறார்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி வைத்துள்ளார்கள். தற்போது மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காக அந்த பணத்தை மக்களுக்கு கொடுத்து வாக்குகளை வாங்க முயற்சிக்கின்றனர். அதோடு பல மாநிலங்களிலும் சமூக விரோதிகளையும் குண்டர்களையும் வைத்து வாக்காளர்களை மிரட்டி பணிய வைக்கின்றனர். இப்படி பணிய வைத்து பாஜகவுக்கு வாக்குகளை வாங்க முயற்சிக்கின்றனர். பாஜகவின் இந்த சதி செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மம்தா பேசினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன்...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில்...

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை...
spot_imgspot_imgspot_imgspot_img