Friday, March 13, 2026

தங்க மங்கை கோமதி மாரிமுத்துவிற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி – திமுக அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து இந்தியா சார்பில் தங்கம் வென்றார். இந்த போட்டித் தொடரில், ஆரோக்கிய ராஜ் வெள்ளிப் பரிசு வென்றார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்தியாவிற்கான 2 பேரின் சாதனைகளை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தங்க மங்கை கோமதிக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் லட்சம் வழங்கப்பட உள்ளது. கோமதியை ஊக்கப்படுத்துகிற வகையில் ரூ.5 லட்சம் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கப்படும் என மாநில தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் இன்று காலை பேசிய கோமதி மாரிமுத்து, தமிழக முதல்வர் தனக்கு வாழ்த்து தெரிவித்து வீட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், திமுக தலைவர்கள் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தன்னை தொடர்பு கொண்டு வாழ்த்தியதாகவும் கூறியிருந்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img