Saturday, March 21, 2026

அதிரை WCC கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்ட முடிவுகள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி  22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் இன்று வியாழக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. காலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் RCCC மற்றும் செருவாவிடுதி அணியினர் மோதினர். முதலில் பேட் செய்த செருவாவிடுதி அணியினர், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆடிய RCCC அணியினர், 9.5 ஓவர்களில் 113 ரன்கள் அடித்து வெற்றி பெற்றனர்.

பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் Eleven ஸ்டார் ராம்நாடு அணியினரும் TRPCC காரைக்கால் அணியினரும் மோதினர். டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராம்நாடு அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். பின்னர் சேஸ் செய்த TRPCC காரைக்கால் அணி, 122 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தனர்.

நாளைய(03/05/2019) தினம் இறுதி ஆட்டம் ஆட இருக்கின்ற அணிகள் :

Eleven ஸ்டார் ராம்நாடு vs RCCC

நேரம் : மதியம் 2 மணி

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img