Monday, February 2, 2026

அதிரையில் தமுமுக நடத்திய மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி !!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் தமுமுக ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய கைப்பந்து தொடர் போட்டி பெரிய ஜுமுஆ பள்ளி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது.

இத்தொடர் போட்டியில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாடின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடர், பகல்/இரவு ஆட்டமாக நடைபெற்றது.

முன்னதாக இத்தொடரில் சிறப்பு விருந்தினர்களாக பெரிய ஜுமுஆ பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் தெஹ்லான் மரைக்காயர், தமுமுக மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, மாவட்ட செயலாளர் ஷேக் மொய்தீன், WSC நிறுவனர் மாஜித், நூவண்ணா எ நூர் முகமது, அல் அயன் மண்டல பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான், தமுமுக ஸ்போர்ட்ஸ் அகாடமி கனி மற்றும் தமுமுக நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு வீரர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.

இறுதியில் இத்தொடரின் முதல் பரிசை பட்டுக்கோட்டை அணியும், இரண்டாம் பரிசை அதிரை ESC அணியும் , மூன்றாம் பரிசை அதிரை ASC அணியும், நான்காம் பரிசை தமுமுக அணியும் தட்டிச்சென்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img