அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்குழுமம் சார்பில் அதிரையில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடைபெற்றன.
அதேபோல் இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் அதிரை சகோதர்கள் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் உள்ள சகோதரர்களிடம் பொருளாதார நிதியுதவிகள் பெறப்பட்டது.
அதன்படி கடந்த வாரம் அதிரை MSM நகர் பள்ளியில் அதிரை சகோதர்கள் குழுமம் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை மக்கா பள்ளியில் அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிரையில் வருமானம் இல்லாத பள்ளிகளில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவதற்கு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்காக நிதியுதவி செய்த சகோதரர்களுக்கு அதிரை சகோதர்கள் குழுமம் சார்பில் நன்றிகளும் தெரிவித்துள்ளனர்.










