Saturday, March 21, 2026

காந்தி பிறந்த மண்ணில் கோட்சேவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்திய இந்து மகாசபையினர் !!

spot_imgspot_imgspot_imgspot_img

தேசதந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் பாராமதியில் மே 19ம் தேதி 1910ம் ஆண்டு பிறந்தார்.

சூரத்தின் லிம்பாயத் பகுதியில் சூர்யமுகி ஹனுமான் கோயில் உள்ளது. இங்கு கடந்த 19ம் தேதி கோட்சேவின் பிறந்த நாளை இந்து மகாசபை உறுப்பினர்கள் கொண்டாடினார்கள். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அனுமதி இன்றி கோட்சேவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாக 6 இந்து மகாசபை உறுப்பினர்களை சூரத் போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக சூரத் போலீஸ் கமிஷ்னர் சதீஷ் சர்மா கூறுகையில், “இந்து மகாசபை உறுப்பினர்கள் கோயிலுக்குள் அனுமதி இன்றி புகுந்து கோட்சேவின் புகைப்படங்களை வைத்து பிறந்த நாள் கொண்டாடியதோடு , இனிப்புகள் பரிமாறியும் பஜனை பாடி உள்ளனர். மேலும் இந்த நிகழ்வை அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கு பிறந்த நாள் கொண்டாடியது பொதுமக்களின் உணர்வுகளை காயப்படுத்தி உள்ளது. எனவே இந்து மகாசபையினர் மீது பொதுமக்களிடையே சச்சரவை தூண்டுதல் , அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img